'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ரெண்டையுமே BAN பண்றோம்...' 'எலக்சனுக்கு ரெண்டே நாள் தான் இருக்கும் நிலையில்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிபர் தேர்தலுக்காக பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்துள்ளதாக உகாண்டா அரசு உத்தரவிட்டுள்ளது.

'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ரெண்டையுமே BAN பண்றோம்...' 'எலக்சனுக்கு ரெண்டே நாள் தான் இருக்கும் நிலையில்...' - அதிரடியாக அறிவித்த நாடு...!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் வரும் வியாழனன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 1986 முதல் தேசிய எதிர்ப்பியக்கத்தின் தலைவர் யோவெரி முசெவெனி (76)  என்பவரே நீண்ட ஆண்டுகள் அதிபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதைய எதிர்கட்சித் தலைவர்களில் முசெவெனிக்கு கடும் போட்டி அளிப்பவராக 38 வயதான பிரபல பாடகர் பாபி வைன் உருவாகியுள்ளார்.  மேலும் இன்றைய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள். சராசரியாக 30 வயதுக்குள்ளானவர்கள். அவர்களில் பெரும் கூட்டம் 'புதிய உகாண்டா' என்ற பிரசாரத்துடன் பாபியை பின்தொடர்கிறது.

தற்போது இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் மறு உத்தரவு வரும் வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் அனைத்தையும் தடை செய்யும் படி கூறப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் என்னெவேன்று விசாரிக்கையில், அந்நாட்டில் பெரும்பாலான ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் அரசு ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை எனவும், முக்கிய தினசரி அரசால் நடத்தப்படுகிறது.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் பல ஊடகங்கள் தங்கள் பிரசாரத்தை ஒளிபரப்புவதில்லை என கூறிவருகிறார். மேலும் பாபி வைன் தனது பிரச்சாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பி வந்தார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை தடுக்கும் விதமாக சமூக ஊடகங்களுக்கு தேர்தலுக்கு இரு நாள் முன்பு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உகாண்டாவின் தற்போதைய அரசு.

மற்ற செய்திகள்