ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுனு ஒரு 'ஏர்போர்ட்' வச்சிருந்தோம்...! 'இப்போ அதுவும் போச்சு...' - 'உங்க' வேலைய எங்ககிட்ட காட்டிடீங்க இல்ல...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடன் தொல்லையால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா கைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுனு ஒரு 'ஏர்போர்ட்' வச்சிருந்தோம்...! 'இப்போ அதுவும் போச்சு...' - 'உங்க' வேலைய எங்ககிட்ட காட்டிடீங்க இல்ல...!

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள உகாண்டா நாடு உலகளவில் ஏழை நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. ஏழை நாடான உகாண்டா நெருக்கடியான பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு உகாண்டா தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டிடம் கடன் வாங்க முடிவெடுத்தது.

அதனை தொடர்ந்து வில்லங்க நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீன அரசும் உகாண்டாவுக்கு கடன் தர சம்மதித்தது. அதோடு, கடன் வாங்குவதோடு அல்லாமல் இதற்கேன தனி ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது.

சீனா கொடுக்கும் கடனுக்கு ஈடாக எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களை அடமானமாக பெற சீனா வலியுறுத்தியுள்ளது. அப்போதிருந்த சூழலில் உகாண்டா அரசும் சீனாவின் இந்த கட்டுப்பாடுளுக்கு எல்லாம் சம்மதம் தெரிவித்து உகாண்டா அரசின் நிதித்துறை, சிவில் விமான போக்குவரத்துத்துறையினர் சீனாவுக்கு சென்று கடன் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினர்.

அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று உகாண்டா அரசுக்கும், சீனாவின் எக்ஸிம் (EXIM - Export Import Bank) வங்கிக்கும், உகாண்டா அரசுக்கும் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்ததில் சுமார் 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை எனவும் 20 ஆண்டுகள் கடன் காலம், 7 ஆண்டுகள் கருணை காலம் எனவும் இதற்கு இரண்டு சதவிகிதம் வட்டி என ஒப்புக்கொண்டு இந்த கடன் தொகையை உகாண்டாவுக்கு அளித்தது சீன அரசு.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு வரை உகாண்டா தனது கடன் தொகையை செலுத்த இயலவில்லை. இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளும்.

இதனால், தற்போது ஆபத்து காலத்தில் இருக்கும் உகாண்டா கடன் ஒப்பந்தத்தின் ஆபத்தான ஷரத்தை நீக்குமாறு உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி உயர்மட்ட குழுவினரை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சீனாவோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது

இந்நிலையில், உகாண்டா தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு, இந்த விவகாரத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகாண்டா கேட்க முடியாது என கூறப்படுகிறது.

UGANDA, AIRPORT, CHINA

மற்ற செய்திகள்