‘என்னென்ன பண்றாங்கன்னு பாருங்க..!’- விண்வெளியில் உணவு டெலிவரி… பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற Uber Eats..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வால மனித வரலாற்றியிலேயே முதன் முறையாக விண்வெளியில் ஆன்லைன் உணவு டெலிவரியை மேற்கொண்ட நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது Uber Eats.
சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபெர் நிறுவனம் விண்வெளிக்கே சென்று டெலிவரி செய்துள்ளது. இதற்காக ஜப்பானின் ஃபேஷன் உலக பணக்காரர் ஆன யுசாக்கூ மேசவா உடன் உபெர் ஈட்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.
யுசாக்கூ, சோயுஸ் என்னும் விண்கலம் மூலமாக 12 நாட்கள் கொண்ட மிஷன் ஆக விண்வெளி பயணத்தை சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேற்கொண்டுள்ளார். இவர் தான் உபெர் டெலிவரி பாய் ஆக செயல்பட்டுள்ளார். உபெர் உணவு பார்சலை எடுத்துக்கொண்டு இந்தப் பணக்காரர் டெலிவரி செய்ய விண்கலத்தை எடுத்துக் கொண்டு விண்வெளிக்கே சென்றுள்ளார்.
அமெரிக்க உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ் இந்த வரலாற்று நிகழ்வை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. யுசாக்கூ கொண்டு சென்ற உணவு டெலிவரியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் வாங்கிக் கொண்டனர். உபெர் ஈட்ஸ் சார்பில் உணவு டெலிவரி பார்சலில் இருந்த ஐட்டங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
Uber Eats のデリバリーは、進化し続けています。
今、配達していない場所へ、次々と。@yousuck2020 さん、配達ありがとうございます🚀#宇宙へデリバリー #UberEats pic.twitter.com/Sh0PsXXwMX
— Uber Eats Japan(ウーバーイーツ) (@UberEats_JP) December 14, 2021
அந்த உணவு பார்சலில் மிசோ, ஃபீப் பவுல், மூங்கில் சிக்கன், பன்றி இறைச்சி ஆகிய உணவுகள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த வரலாற்று நிகழ்வை பூமியில் வாழும் மக்கள் உடன் கொண்டாட விரும்பி உள்ள உபெர் ஈட்ஸ் SPACEFOOD என்னுடம் கூப்பன் கோட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
“உபெர் எங்கேயும், எப்போதும், என்ன உணவு வேண்டுமானாலும் டெலிவரி செய்யும், இப்போது விண்வெளி உட்பட” என்றும் விளம்பரப் பிரச்சாரங்களை உபெர் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மற்ற செய்திகள்