‘இனி டிரைவர் கிட்ட நல்ல ரேட்டிங் வாங்குங்க இல்லன்னா..’ ஊபர் எடுத்திருக்கும் அதிரடி முடிவு..
முகப்பு > செய்திகள் > உலகம்ஊபர் ஆப்பில் இனிமேல் ஓட்டுநர் தரும் ரேட்டிங்கும் மிக முக்கியம் என ஊபர் அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறது.
ஊபர் சேவையை உபயோகிக்கும்போது பயணிப்பவர் ஓட்டுநருக்கு ரேட்டிங் தரும் வசதி உள்ளது. அவர் நடந்துகொள்ளும் விதத்தில் ஏதேனும் தவறிருந்தால் குறைவான ரேட்டிங் அளிக்கலாம். இப்படி பலர் குறைந்த ரேட்டிங் அளித்தால் அவர் நிரந்தரமாக விலக்கி வைக்கப்படுவார்.
இதேபோல ஊபர் ஓட்டுநர் பயணிப்பவர்களுக்கு ரேட்டிங் தரும் வசதியும் உள்ளது. ஆனால் இதுவரை அந்த ரேட்டிங்குக்குப் பெரிதாக உபயோகம் இல்லாமல் இருந்தது. இனிமேல் டிரைவர்கள் வழங்கும் ரேட்டிங்குக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என முடிவெடுத்துள்ளது ஊபர்.
ஓட்டுநர்களைத் தவறாகப் பேசுவது, காத்திருக்க வைப்பது, அதிக பயணிகளை ஏற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது, மேப் சொல்லும் ரூட்டில் செல்ல விடாமல் வேறு ரூட்டில் போகச் சொல்லுவது ஆகியவற்றிற்காக ஓட்டுநர்களும் பயணிப்பவருக்கு ரேட்டிங் தரலாம். ஒரே மாதத்தில் 2 ஓட்டுநருக்கு மேல் குறைவான ரேட்டிங் அளித்தால் அந்த புரொஃபைல் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என ஊபர் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உடனடியாக அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு எப்போது வரும் எனத் தெரியவில்லை.