'ஒழுங்கா ஏ.சியை சுத்தம் செய்யுறீங்களா'?... 'காத்திருக்கும் ஆபத்து'... வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

'ஒழுங்கா ஏ.சியை சுத்தம் செய்யுறீங்களா'?... 'காத்திருக்கும் ஆபத்து'... வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதில் அந்த எந்திரங்களைச் சரியாகப் பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனைச் சுத்தம் செய்வது முக்கியமான ஒன்றாகும். இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களைச் சரியாகத் தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள்.

UAE residents warned of risk to health from dirty AC Unit

இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மோசமாகப் பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

UAE residents warned of risk to health from dirty AC Unit

அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்திலிருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகனப் புகை போன்றவை கலப்பது அதிகரிக்கும் எனத் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஜானி ஆவூக்காரன் எச்சரித்துள்ளார்.

மற்ற செய்திகள்