கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழும் 'லிவிங் டுகெதர்'-க்கு அனுமதி...! 'மது அருந்தவும் தடையில்லை...' - அமல்படுத்த போவதாக அறிவித்த வளைகுடா நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்லாமிய நாடான ஐக்கிய அமீரகத்தில் இனி மது அருந்தவும், திருமணம் செய்யாமல் உடன் வாழும் உரிமையும் சட்டமாக அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு தங்கள் நாட்டில் மிக கடுமையான மற்றும் பழமை வாய்ந்த சட்டங்களை, தங்கள் நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படவும் மற்றும் சமூக நிலைப்பாட்டிற்காகவும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அந்நாட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழவும், மதுபானம் அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதுக்கு முன்புவரை அமீரக பார்கள் மற்றும் கிளப்களில் மதுபானம் கிடைக்கும் ஆனால் தனிநபர் ஒருவர் மதுபானத்தை வாங்கவோ அல்லது வீட்டில் வைத்திருக்கவோ அரசு அங்கீகாரம் பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆனால் இனி அவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படமாட்டாது. மேலும், இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி ஆணவ கொலை குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனிநபர் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்து இருப்பதனால், அந்நாடு சுற்றுலா பயணிகளுக்கு மேற்கத்திய அனுபவம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு முன்பிருந்த கடுமையான இஸ்லாமிய சட்டத்தின்படி, வெளிநாட்டினர் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. இனி இம்மாதிரியான சிரமங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்