ட்விட்டர் நிறுவனத்துக்கு 1,100 கோடி அபராதம்.. என்ன ஆச்சு?..முழு விபரம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல சமூக வலை தளமான ட்விட்டர் நிறுவனத்துக்கு 1,100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

ட்விட்டர் நிறுவனத்துக்கு 1,100 கோடி அபராதம்.. என்ன ஆச்சு?..முழு விபரம்.!

ட்விட்டர்

உலகம் முழுவதும் 229 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனம் முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல், 2017 ஆம் ஆண்டுவரையில் தங்களது பயனாளர்களின் போன் நம்பர் மற்றும் முகவரிகளை சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்காவின் ஃபெடரல் டிரேட் கமிஷன் அளித்த இந்தப் புகாரில், ட்விட்டர் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு எட்டப்பட்ட விதிமுறையை மீறியதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த கமிஷனின் தலைவர் லினா கான் இதுபற்றி பெடரல் நீதிமன்றத்தில் பேசுகையில்,"இந்த நடைமுறை 140 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களைப் பாதித்தது. அதே நேரத்தில் ட்விட்டரின் முதன்மையான வருவாயை அதிகரிக்கிறது" என்றார்.

Twitter to pay 150mn USD fine for privacy breach of user data

தனியுரிமை

இதுகுறித்து ட்விட்டரின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கீரன் எழுதியுள்ள பதிவில்,"இந்தச் சிக்கல் செப்டம்பர் 17, 2019 இல் தீர்க்கப்பட்டது, மேலும் ட்விட்டரைப் பயன்படுத்தும் நபர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து ஆக்கப்பூரவமாக இயங்கிவருகிறோம். பயனாளர்களின் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றில் ஃபெடரல் டிரேட் கமிஷனுடன் இணைந்து இயங்கி வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter to pay 150mn USD fine for privacy breach of user data

அபராதம்

இந்த வழக்கில் ஃபெடரல் டிரேட் கமிஷன் அளித்துள்ள புகாரில்,"150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனர் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. இந்த புகாரை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றம் அங்கீகரிக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் ட்விட்டர் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவேண்டிவரும்.

TWITTER, FINE, COURT, ட்விட்டர், அபராதம், நீதிமன்றம்

மற்ற செய்திகள்