ட்விட்டர் CEO பதவி விலகினாலும் அவருக்கு எலன் மஸ்க் இவ்ளோ கோடி கொடுக்க வேண்டி வருமா? வெளிவந்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல சமூக வலைத் தளமான டிவிட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அந்த நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்துவரும் பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தால் மிகப்பெரிய தொகையை மஸ்க் கொடுக்க வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் CEO பதவி விலகினாலும் அவருக்கு எலன் மஸ்க் இவ்ளோ கோடி கொடுக்க வேண்டி வருமா? வெளிவந்த தகவல்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் நேற்று அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

44 பில்லியன்

ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி டிவிட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால். தற்போது டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் பராக் அந்த பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தது என்ன?

இதனிடையே ட்விட்டர் நிர்வாகத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று Equilar நிறுவனம் ஆரூடம் சொல்லியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதில் டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒருவேளை பதவிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு நிறுவனம் இழப்பீடாக 42 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய்) வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக டிவிட்டர் ஊழியர் கூட்டத்தில் பராக் பேசுகையில்,"ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அந்நிறுவனத்தை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ELONMUSK, PARAGAGARWAL, TWITTER, எலான்மஸ்க், பராக்அகர்வால், டிவிட்டர்

மற்ற செய்திகள்