வெளிநாடுகளுக்கு போக இரட்டை சகோதரிகள் செஞ்ச வேலை.. பல வருஷமா நடந்த தில்லுமுல்லு.. ஏர்போர்ட் அதிகாரிக்கு வந்த திடீர் சந்தேகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது அடையாளங்களை மறைத்து பாஸ்போர்ட்களை மாற்றி, பல ஆண்டுகளாக விமான பயணம் மேற்கொண்டுவந்தது விமான நிலைய பணியாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Also Read | குடும்ப கஷ்டத்தால் பஞ்சர் கடை நடத்தியவர்.. இன்று IAS.. கல்வியால் வறுமையை வீழ்த்திய வருண் பரண்வால்..!
வட சீனாவில் உள்ளது ஹார்பின் நகரம். இங்கே வசித்துவரும் இரட்டை சகோதரிகள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கோண்டு வந்திருக்கின்றனர். இந்த சகோதரிகளில் ஒருவர் ஜப்பானை சேர்ந்த நபரை திருமணம் செய்திருக்கிறார். இதனால் கணவரின் ஊருக்கு செல்ல முடிவெடுத்த அவர் ஜப்பான் விசா கோரி விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அவருக்கு குறித்த நேரத்தில் ஜப்பான் விசா கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த பெண்மணி தனது இரட்டை சகோதரியை சந்தித்து விஷயத்தை கூறியிருக்கிறார்.
விசா
தனது சகோதரியிடம் செல்லுபடியாகும் ஜப்பானிய விசா இருப்பதை அறிந்தே, அந்தப் பெண் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதனை அடுத்து தனது சகோதரியின் விசா மூலமாக அவர் ஜப்பானுக்கு பயணம் செய்திருக்கிறார். இதற்காக தங்களுடைய பாஸ்போர்ட்டை மாற்றியிருக்கிறார்கள் இந்த இரட்டை சகோதரிகள்.
ஜப்பானில் உள்ள தனது கணவரை பார்க்க தனது சகோதரியின் விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் பயணித்திருக்கிறார் இந்த பெண். கடந்த வருடங்களில் இவர் ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தில்லுமுல்லு
இந்நிலையில், தனது சகோதரியிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்த பெண்ணும், தன்னிடம் இருந்த சகோதரியின் பாஸ்போர்ட் மூலமாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார். இப்படி இரண்டு சகோதரிகளும் 30 க்கும் மேற்பட்ட முறை விமான பயணம் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வழக்கம்போல ஜப்பான் செல்ல நினைத்த பெண் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் கேள்விகேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார் அந்த பெண். இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தில்லுமுல்லு வேலை வெளியே தெரிந்திருக்கிறது.
சீனாவில் இரட்டை சகோதரிகள் தங்களது பாஸ்போர்ட்டை மாற்றி வெவ்வேறு நாடுகளுக்கு பயணித்துவந்தது விமான நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பலரையில் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மற்ற செய்திகள்