'அழாத டா தங்கம்!.. உனக்கு நான் இருக்கேன்!'.. காபூல் விமான நிலையத்தில்... பெற்றோரைப் பிரிந்த குழந்தை!.. தாயாக மாறிய அயல் நாட்டு ராணுவ வீராங்கனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகில் மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக காபூல் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.

'அழாத டா தங்கம்!.. உனக்கு நான் இருக்கேன்!'.. காபூல் விமான நிலையத்தில்... பெற்றோரைப் பிரிந்த குழந்தை!.. தாயாக மாறிய அயல் நாட்டு ராணுவ வீராங்கனை!

தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமானநிலையத்தில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

'நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும், நம் பிள்ளைகளாவது வெளிநாட்டிற்கு சென்று நிம்மதியாக உயிர் வாழட்டும்' என்று, குழந்தைகளை விமானநிலையத்தில் இருக்கும் இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்திடம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், காபூல் விமான நிலையத்தில் தனது தாயிடம் இருந்து பிரிந்து சென்ற 2 மாத ஆப்கானிய குழந்தையை துருக்கி இராணுவ வீரர்கள் பாசத்துடன் கவனித்து வந்துள்ளனர்.

இந்த குழந்தை முதலில் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பான புகைப்படம் மட்டும் வெளியாகியிருந்தது. இதையடுத்து தற்போது, அந்த குழந்தையின் பெயர் Farista Rahmani எனவும், பிறந்து 2 மாதமே ஆன நிலையில், விமானநிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, குழந்தை காணமல் போயுள்ளதும் தெரியவந்ததுள்ளது.

அதைத் தொடர்ந்து, துருக்கி இராணுவம் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு, உணவளித்து வந்துள்ளனர். அதன் பின் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவந்ததால், அது குழந்தையின் தந்தையிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய் Hadiya Rahmani எனவும், தந்தை Ali Musa Rahmani எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த குழந்தையை தன் குழந்தை போல், துருக்கி பெண் இராணுவ வீராங்கனை பாசமாக அணைத்து முத்தமிட்டுக் கொண்ட புகைப்படம் காண்போரை நெகிழச் செய்துள்ளது.

 

 

மற்ற செய்திகள்