என்ன தாண்டி 'காசு' மேல யாராவது 'கை' வச்சு பார்க்கட்டும்...! 'அப்போ இருக்கு...' - கடைக்கு 'சிசிடிவி' கேமராவும் 'நம்ம ஆளு' தான்...!
முகப்பு > செய்திகள் > உலகம்நகைக் கடையில் இருக்கும் கல்லாபெட்டியை அணில் ஒன்று பாதுகாத்து வரும் சம்பவம் அனைவரையும் வியக்கவைக்கிறது.
பொதுவாக வீடுகளின் காவலன் என்றாலே நம் நினைவுக்கு வருவது நாய்கள் மட்டுமே. ஆனால் இந்த சம்பவத்தை பார்க்கும்போது, இனி கல்லாப்பெட்டிக்கு அணில்களை பாதுகாவலர்களாக நிறுத்தவும் வாய்ப்பு அதிகம்.
துருக்கியில் டையார்பாகிர் நகரில் மெஹ்மத் யுக்செல் என்பவர் நகைக்கடை வைத்து நடத்துவருகிறார். அதோடு மெஹ்மத், மெமோகன் என்ற அணிலையும் ஆசையாக வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் மெமோகன் என்ற இந்த அணில் செய்யும் விஷயம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த நகைக் கடையில் மெமோகன் இருக்கும் போது தன் உரிமையாளர் மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுமாம். பல பேர் இம்மாதிரி மெமோகன் அணிலிடம் கடிவாங்கி ஓடியுள்ளதாகவும் மெஹ்மத் யுக்செல் கூறுகிறார்.
அதோடு நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் இந்த அணில் சி சி டிவி கேமரா போல உற்று நோக்குமாம். வாடிக்கையாளர்களின் குழந்தைகளோடு மெமோகன் உற்சாகமாக விளையாடுவதையும் காணலாம்.
மற்ற செய்திகள்