உயிரை காப்பாத்திய இந்திய ராணுவ வீரர்கள்.. நன்றி சொல்ல திரண்ட துருக்கி மக்கள்.. உருக்கமான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்களுக்கு துருக்கி மக்கள் நன்றி சொல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக் குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா 'ஆப்பரேஷன் தோஸ்த்' எனும் பெயரில் அனுப்பியுள்ளது. இதுவரையில் 7 விமானங்களில் மீட்புப் படை, மோப்ப நாய் பிரிவு, நிவாரண பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை இந்தியா துருக்கிக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் துருக்கியில் ஹடாய் பகுதியில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவ படை இந்தியா திரும்பியிருக்கிறது. அப்போது, அங்குள்ள உள்ளூர் மக்கள் திரண்டு வந்து இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர். ராணுவ வீரர்கள் நடந்து வரும் வழியில் இருமருங்கிலும் நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய அம்மக்கள் கட்டியணைத்து தங்களுடைய நன்றியை உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றனர். இன்னம் சிலர், இந்திய ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய ஆடைகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த வீடியோவை இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்திருப்பதுடன் பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி வருகின்றனர்.
#OperationDost #IndianArmy Medical Facility at Iskenderun, Hatay, concluded their services amidst gratitude and applause from the locals. The team of 60 Para Field Hospital will be returning to #India after their selfless efforts in earthquake affected #Türkiye.@MEAIndia pic.twitter.com/KjoCn1lCz0
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 19, 2023
Also Read | ஜெயிலில் திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்.. பதட்டத்துல செல்போனை மறைக்க கைதி செஞ்ச காரியம்.. அதிர்ச்சி..!
மற்ற செய்திகள்