டெஸ்ட் பண்ணின 78 தடவையும் கொரோனா பாஸிடிவ்.. நெகடிவ்-னு வந்ததே இல்ல.. என்ன காரணம்? பல மாதங்களாக 4 சுவற்றுக்குள் வாழும் மனிதர்
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கி: துருக்கியில் 78 முறை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டு பெரும்சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்னும் கொடிய தொற்று உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதிலிருந்து எந்த நாடுகளும் தப்பவில்லை. அது முதல் அலையில் இருந்து மூன்றாம் அலை என தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.
துருக்கியில் வாழும் முசாஃபர் கயாசன் (Muzzafer Kayasan) எனும் அந்த நபர் முதன்முறையாக நவம்பர் 2020-ல் கொரோனா பரிசோதனை செய்தார். அவர் கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு 14 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
எப்போது பரிசோதனை நடந்தாலும் பாசிடிவ்:
முசாஃபர் கயாசன், நவம்பர் 2020-ல் முதன்முதலில் கொரோனா பாசிடிவாக உள்ளதா என பரிசோதித்தபோது, அவருக்கு கோவிட் -19 அறிகுறிகள் இருந்தன, அவை விரைவில் குணமடைந்தன. ஆனால், அதன் பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அவருக்கு நெகடிவ் என வரவே இல்லை.
வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா பாசிட்டிவ் உள்ள நபரைத் தனிமைப்படுத்துவது முக்கியம் என்பதால், கயாசன் இயைபு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. அவர் தனது குடும்பத்துடன் பழகவோ நேரத்தை செலவிடவோ முடியாது, நண்பர்களை கூட சந்திக்க முடியாது.
கொரோனா தடுப்பூசி போடவில்லை:
ஒரு ஜன்னலின் உதவியுடன் மட்டுமே அவர் தனது குடும்பத்தினருடன் உரையாட முடியும். தனிமைப்படுத்தலில் இருக்கும் போது அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய துக்கம், தங்கள் அன்புக்குரியவர்களைத் தொட முடியாததுதான். அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சோதனைகளில் கயாசனுக்கு ஒரு முறை கூட நெகட்டிவ் என வரவில்லை என்பதால், அவரால் கொரோனாவுக்கான தடுப்பூசியையும் செலுத்த முடியவில்லை.
லுகேமியா நோயாளி:
கயாசன் ஒரு வகை இரத்த புற்றுநோயான லுகேமியா நோயாளி. இந்த நோய் உடையவர்களின் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக பாதிக்கிறது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நோய் கயாசனின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துள்ளது, இதனால் அவரது இரத்தத்தில் இருந்து கோவிட் -19 அகற்றப்படவில்லை.
மற்ற செய்திகள்