"சுத்தி போடணும்யா".. 128 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட குழந்தை.. உலகையே வென்ற மழலையின் சிரிப்பு!!
முகப்பு > செய்திகள் > உலகம்மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.
இதனையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக்குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா 'ஆப்பரேஷன் தோஸ்த்' எனும் பெயரில் அனுப்பியுள்ளது. உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகளும் நடந்து வருகிறது. அதிகமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.
தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நிறைய இடங்களில் உருவாகி உள்ள இடிபாடுகளில் இருந்து குழந்தைகளையும் உயிருடன் பல மணிநேரம் கழித்து மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சுமார் 128 மணி நேரம் கழித்து ஒரு குழந்தையை மீட்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். துருக்கியின் தென் கிழக்கு பகுதியான ஹாட்டி என்னும் இடத்தில் மீட்புப் படையினர் கட்டிட குவியலை அப்புறப்படுத்திய சமயத்தில் அங்கே 2 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. சுமார் 128 மணி நேரங்கள் கழித்து அந்த குழந்தை மீட்கப்பட்ட சூழலில், பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு உணவும் கொடுத்த பின்னர் அந்த குழந்தை சிரித்த முகத்துடன் இருந்த விஷயம், பலரையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது அதிக வைரலாகி வருகிறது.
துருக்கியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு மத்தியில், இப்படி நிறைய குழந்தைகள் உயிருடன் பிழைத்துக் கொள்ளும் போது நடைபெறும் குட்டி குட்டி அதிசயங்கள், பலரையும் மனம் உருக வைத்தும் வருகின்றது.
🇹🇷 And here is the hero of the day! A toddler who was rescued 128 hours after the earthquake. Satisfied after a wash and a delicious lunch. pic.twitter.com/0lO79YJ7eP
— Mike (@Doranimated) February 11, 2023
மற்ற செய்திகள்