'டிரம்ப்' மனைவி 'மெலனியா...' 'ஹெச்-1பி' விசாவில் 'அமெரிக்கா வந்தவர்தான்...' 'ஓ...' 'இப்படி ஒரு கதை இருக்கா...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 1996-ம் சுற்றுலா விசாவில் வந்த மெலனியா டிரம்ப், 2001-ல் ஐன்ஸ்டீன் விசா பெறுவதற்கு முன் ஹெச்1.பி உள்ளிட்ட பல விசாகளுக்கு விண்ணப்பித்துள்ளார் என்ற விவாதம் தற்போது அமெரிக்காவில் சூடு பிடித்துள்ளது.
அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் ஹெச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். இந்த விசாவால் உள்நாட்டு ஊழியர்களின் வேலை பாதிக்கப்படுவதாக டிரம்ப் பல முறை குற்றம் சாட்டி வந்தார். எனினும், தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்களுக்கான ஹெச்-1பி விசா வழங்குவதை அவர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், H2B, L மற்றும் ஜே பிரிவு விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரெம்பின் இந்த நடவடிக்கையை அடுத்து மற்றொரு புறம் மெலனியா குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
ஸ்லோவேனிய நாட்டை சேர்ந்த அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா அமெரிக்காவின் குடிமகளாக மாறியது பற்றியே பலர் தற்போது விவாதித்து கொண்டுள்ளனர்.
மெலினியாவிற்கு ஹெச்1 பி கிடைக்காமல் இருந்திருந்ததால் 1998-ம் ஆண்டு நடைபெற்ற விருந்து ஒன்றில் அறிமுகமான ஸ்லோவேனிய மாடல் மெலனியா டொனல்ட் ட்ரம்பை சந்தித்திருக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்காது.
மெலனியா 1996-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா விசா மூலமாக தான் வந்தார். அதன்பின் அமெரிக்காவில் தங்க ஹெச்1 பி உள்ளிட்ட பல விசாகளுக்கு விண்ணப்பித்தார். இறுதியாக ஐன்ஸ்டீன் விசா என அழைக்கப்படும் இ.பி1 விசாவை 2001-ல் பெற்றார்.
2006-ம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக ஆனார். இந்த விசா இல்லையென்றால் மெலனியா அமெரிக்க அதிபரின் மனைவியாக தற்போது இருந்திருக்க முடியாது என்று சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
மெலனியாவுக்கு ஐன்ஸ்டீன் விசா கிடைத்ததும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஐன்ஸ்டீன் விசா ஆஸ்கார், நோபல், புலிட்சர் விருதுகள் வென்றவர்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்