டிரம்ப் vs ஜோ பிடன்... அடுத்த அதிபர் யார்!?.. அமெரிக்காவின் அரசியல் சாணக்கியர் திட்டவட்டம்!.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி வெறுவார் என்று பேராசிரியர் ஆலன் லிச்மன் (Allan Lichtman) கணித்துள்ளார்.

டிரம்ப் vs ஜோ பிடன்... அடுத்த அதிபர் யார்!?.. அமெரிக்காவின் அரசியல் சாணக்கியர் திட்டவட்டம்!.. வெளியான பரபரப்பு தகவல்!

1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் யார் வெற்றி பெறுவார் என்பதை சரியாக கணித்து வரும் ஆலன், டிரம்ப் பதவியில் இருக்கும் நேரம் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

வெற்றி பெறுபவரை தீர்மானிக்க 13 வகையான காரணிகளை ஆய்வு செய்வதாகக் கூறும் ஆலன், அதில் 6 க்கும் மேற்பட்ட காரணிகளில் எதிர்மறை முடிவுகளைப் பெறுபவர் தோல்வி அடைவார் என்று கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டில் மீண்டும் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று தான் கணித்ததாகவும், ஆனால் கொரோனா தொற்றை அவர் கையாண்ட விதத்தால் குறுகிய கால பொருளாதாரம், நீண்ட கால பொருளாதாரம் மற்றும் சமூக அமைதியின்மை ஆகிய மூன்று காரணிகளை டிரம்ப் இழந்து விட்டதாகவும் ஆலன் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்