'அவங்க' சொல்றத எல்லாம் நம்பிட்டு... சும்மா சும்மா என் 'வழில' வராதீங்க... நம்மள கடுப்பேத்துறதே வேலையா போச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரண்டு பதிவுகளை ட்விட்டர் நிர்வாகம் தவறான செய்தி என குறிப்பிட்ட நிலையில், ட்விட்டர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு கலிஃபோர்னியா மாகாண மக்கள் தேர்தலின் போது தபால் வாக்குசீட்டு மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம் என அம்மாகாண ஆளுநர் அறிவித்திருந்தார்.
கலிபோர்னியா மாகாண ஆளுநரின் இந்த கருத்தை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க குடிமக்கள் இல்லாதவர்களுக்கும் கலிபோர்னியா அரசு வாக்குசீட்டு வழங்குகிறது என விமர்சித்திருந்தார். டிரம்ப்பின் குற்றச்சாட்டை ஆய்வு செய்த சில முன்னணி செய்தி நிறுவனம் அவரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நிரூபித்தன. இதனைத் தொடர்ந்து, டிரம்பின் ட்வீட்கள் தவறானவை என ட்விட்டர் நிர்வாகம் அடையாளப்படுத்தியது.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், 'தபால் வாக்கு சீட்டுகள் மூலம் மோசடி நிகழும் என்ற எனது கருத்தை சில தவறான அல்லது போலி செய்திகளை பரப்பும் செய்தி நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு ட்விட்டர் எனது பதிவை தவறு என அடையாளப்படுத்தியுள்ளது. அதே போல தேர்தல் விஷயங்களில் ட்விட்டர் தேவையில்லாமல் தலையிடுகிறது. ஒருவரின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ட்விட்டரின் இந்த செயலை ஒரு அதிபராக ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்




