"இந்தியாவும் வரணும்டே!".. 'அதுக்காக இத தள்ளிப்போடுறதுல தப்பே இல்ல!'.. 'பாசக்கார' டிரம்ப் எடுத்த 'பரபரப்பு' முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த வருடம் அமெரிக்கா ஜி-7 மாநாட்டை நடத்துகிறது. ஆனால் செப்டம்பர் மாதத்துக்கு அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஜி-7 மாநாட்டு கூட்டமைப்பில் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை கலந்துபேசி பொருளாதாரப் பிரச்சினைகளையும் வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்களையும் பேசி தீர்த்துக் கொள்வது வழக்கம். அவ்வகையில் கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியப் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
இந்த நிலையில் ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்த ஜி-7 மாநாட்டு கூட்டமைப்பு, கொரோனா காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டையும் செப்டம்பருக்கு மாற்றி அதிரடியாக முடிவு செய்த டிரம்ப், இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும், காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் ஜி-7 மாநாடு இதுவரை இருந்ததாகவும், உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளிப்படுத்தும் மாநாடாக அது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று அறிவித்துள்ளார். இன்னொருபுறம் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இதன்மூலம் இந்தியாவையும் டிரம்ப் அங்கீகரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்