சீக்கிரம் ‘பதவிக்காலம்’ முடியப்போகுது.. சத்தமே இல்லாம டிரம்ப் எடுத்த முடிவு.. ‘சம்பந்தி’ உட்பட 29 பேருக்கு அடிச்ச ‘லக்’..!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிபர் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் தனது சம்பந்தி உட்பட பலருக்கும் சலுகைகள் அளிக்க தொடங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் தனது ஆதரவாளர்களுக்கு அவர் சிறப்பு சலுகைகளை அளிக்க ஆரம்பித்துள்ளார். அதன்படி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு, தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையால் டிரம்பின் சம்பந்தியும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபருமான மனோஃபோர்ட், முன்னாள் ஆலோசகர் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. டிரம்பின் மகள் இவான்காவின் மாமனார் சார்லஸ் குஷ்னர். பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு நியூயார்க்கில் இருந்து விர்ஜினியா வரை சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சார்லஸ் குஷ்னர், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். இந்த காலகட்டத்தில் சார்லஸ்க்கு எதிராக அவரது மைத்துனர் வெள்ளை மாளிகை அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றினார். அதனால் அவரை வழிக்கு கொண்டுவர ஒரு பாலியல் தொழிலாளியுடன் அவரை பழக வைத்து அவர்களின் உறவை வீடியோ எடுத்து அதை தனது சொந்த சகோதரிக்கே அனுப்பியதாக சார்லஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்லஸ் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வரி ஏய்ப்பு, பிரச்சார நிதி சார்ந்த குற்றங்கள் சுமத்தப்பட்டு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் டிரம்ப் அதிபரானதும் இந்த சிறை தண்டனையை குறைத்து உத்தரவிட்டார். இப்போது பதவி முடியும் தருவாயில் உள்ள நிலையில் பொது மன்னிப்பு வழங்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் டிரம்ப் அதிபராக வெற்று பெற்றதில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு பால் மனாஃபோர்ட் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் டிரம்பின் தேர்தல் பிரச்சார மேலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஏழரை ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது இவருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுடன் ஈராக் படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பிளாக்வாட்டர் ராணுவ ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர் என மொத்தம் 29 பேருக்கு அதிபர் டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவால் 26 பேருக்கு முழு மன்னிப்பும், 3 பேருக்கு தண்டனை குறைப்பும் கிடைத்துள்ளது.
மற்ற செய்திகள்