‘அதெப்டி நான் சொல்லியும் கேட்கல’... ‘கடுப்பில் அதிரடியாக ட்ரம்ப் எடுத்த முடிவு’... ‘தேர்தல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க தேர்தல் தொடர்பாக ட்ரம்பின் குற்றச்சாட்டை கேட்க மறுத்து நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அதெப்டி நான் சொல்லியும் கேட்கல’... ‘கடுப்பில் அதிரடியாக ட்ரம்ப் எடுத்த முடிவு’... ‘தேர்தல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்’...!!!

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பிடன் முன்னிலை வகித்து வருவதுடன், அவர் வெற்றிபெற்றதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்காக பல்வேறு வழக்குகளும் தொடரப்போவதாக அவர் கூறிவருகிறார்.

ஆனால், அதிபர் தேர்தலில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3-ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.

Trump fires US election security official who rejected fraud claims

இதனால் மேலும் கடுப்பான அதிபர் ட்ரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார் ட்ரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார். 

‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. அதனால், கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

Trump fires US election security official who rejected fraud claims

ஆனால், கிறிஸ் கிரெப்ஸ் தனது பதவி பறிபோகும் என கடந்த வாரமே தன் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்