'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சநிலையை அடைந்துள்ள நிலையில், அங்கு அனைவரும் முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிச்சிகன் மாநிலத்தில் வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போர்டு மோட்டார் நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக அதிபர் டிரம்ப் அங்குச் சென்றார்.
!['உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்! 'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/trump-doesn-t-wear-coronavirus-mask-in-public-at-ford-plant-thum.jpg)
அதிபருடன் சென்ற அதிகாரிகள், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் கம்பெனிக்குள் வருபவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாய விதிமுறையாகும். ஆனால் அதை எல்லாம் காற்றில் பறக்க விட்ட டிரம்ப், மாஸ்க் அணியாமல் சர்வசாதாரணமாகத் தொழிற்சாலைக்குள் நடந்து வந்தார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களை டிரம்ப் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையாக மாறியுள்ளது.
வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பணியாற்றிய 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிரம்புக்கும் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டிரம்ப் இதுபோன்று செயல்பட்டு வருவது, சமூகவலைத்தளங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நெட்டிசன்கள் பலரும், உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதே நேரத்தில் அதிபர் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அதிபர் டிரம்ப்பை, கேள்விகளால் துளைத்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
![‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..! ‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/surrounded-by-lions-woman-delivers-baby-in-ambulance-in-gujarat.jpg)
![‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..! ‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/hyderabad-woman-claims-her-covid19-positive-husband-missing.jpg)
!['2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்! '2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-michigan-faces-500-year-flood-event-after-dams-fail.jpg)
![டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..! டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tirunelveli-youth-arrested-by-police-for-making-tiktok-video-with-cat.jpg)
!['மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை! 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/jayalalithas-veda-nilayam-to-memorial-tn-govt-promulgates-ordinance.jpg)