என்ன பண்ணி வச்சுருக்கீங்க...? இது 'எல்லாத்துக்கும்' காரண கர்த்தாவே நீங்க தான்...! 'ஒழுங்கா ராஜினாமா பண்ணிட்டு போங்க...' - டிரம்ப் பாய்ச்சல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான் தீவிரவாத படை ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது குறித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபான்கள், வெறும் இருபதே நாட்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர்.
20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவமும் போலீஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன. ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலகி தாஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். ''போரால் காபூல் அழிவதை விரும்பவில்லை. எண்ணற்ற தேசபக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த முடிவெடுத்தேன்'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனே இது அனைத்துக்கும் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், கொரோனா அதிகரிப்பு, மெக்சிகோ எல்லைப் பிரச்சனை, பொருளாதார முடக்கம் போன்றவற்றுக்கும் பொறுப்பேற்று பைடன் ராஜினாமா செய்ய வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
மற்ற செய்திகள்