நீண்ட கால பஞ்சாயத்தை பக்காவாக முடித்த வைத்த டிரம்ப்!.. வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்!.. வெள்ளை மாளிகை பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல் - பக்ரைன் நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

நீண்ட கால பஞ்சாயத்தை பக்காவாக முடித்த வைத்த டிரம்ப்!.. வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்!.. வெள்ளை மாளிகை பரபரப்பு தகவல்!

கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக தங்களை அறிவித்துக் கொண்டதை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளும், அரபு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அந்நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்து வந்தன. பின்னர், 1979ஆம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த சூழலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துவரும் முயற்சியின் பலனாக இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே கடந்த மாதம் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் பக்ரைன் நாட்டின் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக நடத்திய உரையாடலுக்கு பின் டொனால்டு டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.

வருகிற 15-ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறும் விழாவில் இஸ்ரேல் மற்றும் பக்ரைன் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்