கொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்!.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!.. பளிக்குமா 'இந்த' திட்டம்?
முகப்பு > செய்திகள் > உலகம்நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி, லட்சக்கணக்கில் உயிழப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. வரும் நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் டெனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட, ஜனநாய கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்குகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் தாக்கம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கு முன்னதாக கொரரோனாவுக்கு தடுப்பூசி வெளி வந்து விட்டால், டொனால்ட் டிரம்ப் வெற்றி வெற வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
எனவே, தேர்தல் நாளுக்கு முன்னதாக கொரோனா தடுப்பு மருந்தை வெளிக் கொண்டு வருவதில் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்னதாக தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், அமெரிக்கா நோய் தொற்று தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் டெல்ஃபீல்டு கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி, அமெரிக்க மாகாண கவர்னர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வரும் நவம்பர் 1 -ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி வெளியிடப்படும். எனவே, அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோவக்ஸின் (COVAXIN) மருந்து தயராகி விடும் என்று இந்திய மருத்துவக்கழகம் அறிவித்த போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே போலவே, அமெரிக்காவிலும் தேர்தல் வெற்றியை கவனத்தில் கொண்டு, அவசர கதியில் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மற்ற செய்திகள்