"இப்டி உதவி பண்றது கூட ஒரு 'Vibe' தான்'ங்க".. மனம் உருகி போன இணையவாசிகள்.. லைக்குகளை அள்ளும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்அடிக்கடி இணையதளத்தில் பல விதமான வீடியோக்கள் மற்றும் செய்திகள் என நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் தினந்தோறும் வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
நெகிழ்ச்சியான சம்பவமும் அதே வேளையில், அதிர்ச்சிகரமான அல்லது வினோதமான சம்பவங்கள் தொடர்பான செய்திகளும், உலகில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் நிகழ்ந்து அது மக்கள் பலரையும் சென்றடையலாம்.
அப்படி சமீபத்தில் பகிரப்பட்ட மனதை நெகிழ வைக்கும் ஒரு வீடியோ ஒன்று, ட்விட்டரில் வெளியாகி, பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
சாலையை கடக்க முடியாமல் தனியே தவித்து நிற்கும் ஒருவருக்கு உதவி செய்வது என்பது, வழக்கமான காரியம் தான். ஆனால், அதே வேளையில், சாலையைக் கடக்க ஒரு மூதாட்டிக்கு ட்ரக் ஓட்டுநர் எடுத்துக் கொண்ட முயற்சி தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, சாலையை கடந்து தன்னுடைய காரில் ஏறுவதற்காக ஒரு பெண் மூதாட்டி காத்திருக்கிறார். ஆனால், சாலையில் நீர் நிரம்பி கிடப்பதால் அதனைக் கடக்க யோசித்துக் கொண்டு அந்த மூதாட்டி நிற்கிறார். அப்போது, அவர் அருகே இருந்த ட்ரக் ஒன்றின் டிரைவர், அந்த மூதாட்டிக்கு உதவும் வகையில், அந்த லாரியின் பின்புறம் உள்ள ராம்ப் தளத்தை பயன்படுத்தி உள்ளார்.
மூதாட்டியின் காருக்கு நேராக, அந்த ராம்ப் தளம் வந்து நிற்கவே, மழை நீரில் கால் வைக்காமல் அதன் மீது ஏறி, நேராக தனது காரில் ஏறி செல்கிறார் அந்த மூதாட்டி. இந்த வீடியோவின் கேப்ஷனில், "எல்லா ஹீரோக்களும் கேப் அணிந்து கொண்டிருப்பதில்லை. சிலரிடம் எலிவேட்டர் ராம்ப்பும் இருக்கும்" என அதனை பகிர்ந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் நிறைந்துள்ள சாலையை கடக்க ஒரு மூதாட்டிக்கு அந்த நபர் உதவினாலும் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி தான் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோவை காணும் பலரும் அந்த நபருக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன் நன்றிகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Not all heroes wear capes, some have an elevator ramp 💖 pic.twitter.com/kUXLxIXKIq
— Tansu YEĞEN (@TansuYegen) August 21, 2022
Also Read | 431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"
மற்ற செய்திகள்