பேசுவதில் 'சிரமம்' இருந்தாலும்.. அது கொரோனா 'அறிகுறி'யாக இருக்கலாம்... 'உலக' சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசின் பிராதன அறிகுறிகளாக தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

பேசுவதில் 'சிரமம்' இருந்தாலும்.. அது கொரோனா 'அறிகுறி'யாக இருக்கலாம்... 'உலக' சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கபட்டவர்களில் பலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதனை அந்நோயின் அறிகுறியாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், 'கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட மிகுதி ஆனவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை எந்த மருத்துவமும் இல்லாமல் குணமாகும் நிலையில், தீவிரமான அறிகுறிகளாக மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, பேச்சு இழப்பு அல்லது இயங்க முடியாமல் போவது ஆகியவையும் ஏற்படுகின்றன. இது போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். அதே நேரத்தில் பேச்சு இழப்பு ஏற்படுவது எப்போதும் கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறியாக இருக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளது.