Kaateri Mobile Logo Top

350 வருஷமாக கடலில் கொட்டிக்கிடந்த பொக்கிஷம்.. துணிஞ்சு இறங்குன வீரர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

350 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

350 வருஷமாக கடலில் கொட்டிக்கிடந்த பொக்கிஷம்.. துணிஞ்சு இறங்குன வீரர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.!

Also Read | "பூமி'ய இப்டி பாத்துருக்கவே மாட்டீங்க.." பிரம்மிப்பில் ஆழ்த்தும் புதிய பரிமாணம்.. 'European' விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்..

ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல். உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

treasure haul found on 350 year old Spanish galleon

குறிப்பாக கடல்வழி போக்குவரத்து உச்சமடைந்த காலங்களில் கடலில் பொக்கிஷங்களுடன் மூழ்கிப்போன கப்பல்களை மீட்க, பல நாடுகள் போட்டிபோட்டு ஆய்வில் இறங்கியுள்ளன. அந்த வகையில், சமீபத்தில் பஹாமாஸில் நடைபெற்ற ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

350 ஆண்டுகளுக்கு முன்னர்

1656 ஆம் ஆண்டில் நியூஸ்ட்ரா செனோரா டி லாஸ் மாராவில்லாஸ் (The Nuestra Señora de las Maravillas) என்னும் கப்பல் கியூபாவில் இருந்து ஸ்பெயினுக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, இன்னொரு கப்பல் மீது மோதியதில் இரண்டுமே பயங்கர சேதத்தை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக புகழ்பெற்ற மாராவில்லாஸ் கப்பல் கடலுக்குள் மூழ்கிப்போனது. இதில் ஒரு ஆச்சர்யமான தகவலும் இருக்கிறது.

treasure haul found on 350 year old Spanish galleon

அதாவது, இந்த விபத்து நடந்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஒரு ஸ்பெயினை சேர்ந்த கப்பல் மூழ்கியிருக்கிறது. அதில் இருந்த தங்கம் உள்ளிட்ட பொருட்களை மீட்கவே இந்த கப்பல் அனுப்பப்பட்டிருக்கிறது. தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுடன் ஸ்பெயின் திரும்பும்போது இந்த கப்பலும் விபத்தில் சிக்கியிருக்கிறது.

மீட்பு முயற்சிகள்

இதனை தொடர்ந்து இந்த மூழ்கிப்போன கப்பலில் இருந்து பொருட்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஸ்பெயின் இறங்கியது. இப்போது அல்ல, கப்பல் மூழ்கிய ஆண்டிலேயே வீரர்கள் இங்கே தேடுதல் வேட்டையை துவங்கினர். 1990 கள் வரை நீடித்த இந்த தேடுதல் முயற்சியில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் பொருட்கள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டன. இருப்பினும், கடலில் இன்னும் விலை உயர்ந்த பொருட்கள் மிச்சம் இருக்கலாம் என நம்பிய உள்ளூர் வீரர்கள் தொடர்ந்து தேடுதலை நடத்திவந்தனர்.

treasure haul found on 350 year old Spanish galleon

அதன்படி, சமீபத்தில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வில் 2 மீட்டர் நீளமுள்ள தங்க செயின், மரகத கற்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க பதக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் மீட்டிருக்கின்றனர். இது பஹாமாஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு

OCEAN, TREASURE HAUL, SPANISH GALLEON

மற்ற செய்திகள்