Viruman Mobiile Logo top

திருநங்கை - திருநம்பி ஜோடிக்கு பிறந்த குழந்தை.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்.. சாத்தியமானது எப்படி??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருநங்கை, திருநம்பி தம்பதிக்கு குழந்தை பிறந்தது தொடர்பான சம்பவம், தற்போது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

திருநங்கை - திருநம்பி ஜோடிக்கு பிறந்த குழந்தை.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்.. சாத்தியமானது எப்படி??

Also Read | இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி.. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் தல தோனி..!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் டான்னா சுல்தானா. பிரபல மாடலாக இருந்து வரும் இவர், ஆணாக பிறந்தவர். அதன் பின்னர் பெண்ணாக மாறி, மாடலாக இருந்து வரும் திருநங்கை தான் டான்னா சுல்தானா.

இவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவ். முன்னதாக, ஒரு பெண்ணாக பிறந்த எஸ்டெபன், ஒரு ஆணாக மாறி வாழ்ந்து வரும் திருநம்பி ஆவார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, டான்னா மற்றும் எஸ்டெபன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். திருநங்கை மற்றும் திருநம்பி ஜோடி என்பதால், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியம் என்றும் தோன்றலாம்.

trasngender model danna sultana pic with his husband and baby

ஆனால், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய டான்னாவின் கணவர் எஸ்டெபன், தன்னுடைய உடலில் கர்ப்பம் தயாரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன், எஸ்டெபன் கர்ப்பம் ஆனார். கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும், முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டான்னா பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து, எஸ்டெபன் - டான்னா தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை டான்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதால், தற்போது இணையத்தில் இந்த செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.

trasngender model danna sultana pic with his husband and baby

திருநங்கை - திருநம்பி ஜோடிக்கு இயற்கையாக குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்ற சூழ்நிலையில், தங்களின் பிறப்புறுப்புகள் இயற்கையானதாக இருந்ததால், அவர்களால் குழந்தை பெறவும் முடிந்தது என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

Also Read | 30 வருசமா தேடப்பட்டு வந்த குற்றவாளி.. பிளான் பண்ணி தூக்கிய போலீஸ்.. "இவ்ளோ நாள் சினிமா'ல வேற நடிச்சிட்டு இருந்தாரா??"..

TRASNGENDER, TRASNGENDER MODEL, திருநங்கை, திருநம்பி

மற்ற செய்திகள்