'அவங்க செஞ்சது பெரிய தப்பு'... 'அப்படி என்ன செஞ்சாங்க'... 'பொண்ணுங்க ட்ரெஸ்ஸை போட்டுட்டாங்க'... மாடல் அழகிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் உடை உடுத்தியதற்காக ஒரு மாடல் அழகி நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

'அவங்க செஞ்சது பெரிய தப்பு'... 'அப்படி என்ன செஞ்சாங்க'... 'பொண்ணுங்க ட்ரெஸ்ஸை போட்டுட்டாங்க'... மாடல் அழகிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மலேசியா நாட்டை சேர்ந்தவர் Nur Sajat. இவர் மலேசியாவில் நடைபெற்ற மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்ப, மலேசியாவிலிருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் Nur Sajat. ஒரு பெண்ணின் உடையை அணிந்ததற்கு ஏன் இவ்வளவு களேபரம் என நினைக்கத் தோன்றும்.

Transgender Nur Sajat fights extradition from Thailand to Malaysia

ஆனால் Nur Sajat ஒரு திருநங்கை. மலேசியாவில், திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இது தான் பெரும் பிரச்சனையாக மாற, தற்போது Nur Sajat தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மலேசியாவுக்கு நாடுகடத்துமாறு அதிகாரிகள் தாய்லாந்தை வற்புறுத்தி வருகிறார்கள்.

Transgender Nur Sajat fights extradition from Thailand to Malaysia

ஒரு வேளை அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம். அதிலும் அவர் ஆண்கள் சிறையில் தான் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல அஞ்சுவதாகவும் Nur Sajat தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Transgender Nur Sajat fights extradition from Thailand to Malaysia

Nur Sajat நாடு கடத்தப்படும் பட்சத்தில் மலேசியாவில் அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே Nur Sajatக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்