'ரெம்டெசிவிர்' மருந்தை 'இப்படி கொடுத்தால்...' 'செம்ம ஐடியா!...' 'நிச்சயம்' பலன் 'தரும்...' 'வீட்டில் இருந்தபடியே ட்ரீட்மென்ட்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வழங்கும் முறைக்கு மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'ரெம்டெசிவிர்' மருந்தை 'இப்படி கொடுத்தால்...' 'செம்ம ஐடியா!...' 'நிச்சயம்' பலன் 'தரும்...' 'வீட்டில் இருந்தபடியே ட்ரீட்மென்ட்...'

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது ரெம்டெசிவிர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிலியட் நிறுவனம் இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தை எபோலாவுக்கு எதிராக உருவாக்கியது. சில மாற்றங்களுடன் இவை தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ரெம்டெசிவிரை மாத்திரையாக எடுத்தால் கல்லீரல் சிதைவடைந்து மேலும் ஆபத்திற்கு இட்டுச்செல்லும் எனக் கூறப்படுகிறது. அதனால் தற்போது மருத்துவமனையில் நரம்பின் வழியாக மட்டுமே இம்மருந்து நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ரெம்டெசிவர் மருந்தை சுவாசம் வழியாக உள்ளிழுக்கும் வகையில் உலர் பவுடராக்கும் வடிவத்தை முயன்று பார்க்கின்றனர். மேலும் இம்மருந்தை நீர்த்துப்போகச் செய்து ஒரு நெபுலைசருடன் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும் என அறியப்படுவதால், ஒரு நெபுலைசர் மூலம் மருந்தை புகை வடிவத்தில் சுவாசிப்பதால் அவை நுரையீரல் திசுக்களை நேரடியாக அடையும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படாத கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில் இம்மருந்து சிறப்பான பங்களிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன என்று கிலியட் ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்