கொசு கடித்ததால் மரணித்த டிரெய்னி விமானியா..? உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொசு கடித்தால் உயர்ந்ததாக கூறப்படக்கூடிய தகவல்கள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன.

கொசு கடித்ததால் மரணித்த டிரெய்னி விமானியா..? உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!

இங்கிலாந்தில் Suffolk என்கிற இடத்தை சேர்ந்தவர்தான் 21 வயதான Oriana Pepper என்கிற இளம்பெண் இந்த இளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமான பயிற்சியாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரை கடந்த ஜூலை மாதம் இவருடைய நெற்றியில் கொசு ஒன்று கடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பின்னர் இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் இவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கு பிறகு இவருக்கு எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் கொசு கடித்த இடம் மேலும் வீக்கம் அடைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் Oriana திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அவருடைய காதலரால் அழைத்துச்செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்கள்தான் மேலும் அதிர்ச்சி கிளப்பி இருக்கிறது.

குறிப்பாக Oriana-வின் மரணத்துக்கும் கொசு கடிக்கும் சம்பந்தம் இருக்குமா என்கிற தகவல்கள் இன்னும் அவருடைய உறவினர்கள் மற்றும் காதலரிடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் Oriana-வை கடித்த கொசுவினால் அவருடைய நெற்றியில் நோய் தொற்று உருவாகி இருக்கலாம் என்றும் அந்த தொற்றை உருவாக்கிய கிருமிகள் அவரது மூளைக்கு பரவி, இந்த உயிரிழப்புக்கு காரணமாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரணையை செய்த அதிகாரிகள் இப்படி ஒரு விஷயத்தை புதிதாக எதிர் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். Oriana-வின் உறவினர்கள் இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SUFFOLK, ORIANA PEPPER, BRITAIN

மற்ற செய்திகள்