அந்த ஏரியாவே அதிருற மாதிரி.. வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல்.. கதவ உடைச்சு உள்ள நுழைஞ்சப்போ.. ஷாக் ஆன போலீசார்
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன்: லண்டனில் காதலர் தினத்தன்று இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறை:
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கி உள்ளது. இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தனியாக சம்பாதித்து சுயமரியாதையுடன், தனிப்பட்ட பார்வைகளுடன் வாழ்கிறார்கள். ஆணின் தேவை என்பது கண்டிப்பாக வேண்டும் என்று பெண்கள் கருதுவதில்லை. அவர்கள் தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளிலும் பெண்களிடம் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும் அதிகமாகி வருகிறது.
போலீசாரிடம் புகார்:
லண்டன், கிரீன்விச்சில் உள்ள வீட்டில் கடந்த பிப்ரவரி 14-ஆம் நாள், பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
63 வயதான முதியவரை போலீசார் கைது:
அப்போது, காவல்துறையினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே போன போது கத்திக்குத்து காயங்களுடன் நயோமி (41) என்ற பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் இளம்பெண் இறந்து கிடந்த சம்பவத்தில் 63 வயதான முதியவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், கொலை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், நயோமி வசித்த வீட்டருகில் வசிக்கும் ஆண்ட்ரூ இதுகுறித்து கூறும்போது, 'நயோமி உயிரிழந்த அன்றைய இரவு அவர் வீட்டிலிருந்து கத்தும் சத்தம் பலமாக கேட்டது. அதன்பின் தான் நாங்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். அவருக்கு இப்படியொரு பயங்கரம் நடந்ததை நம்ப முடியவில்லை. என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்