டோங்கோ சுனாமியில் சிக்கி 28 மணிநேரம் கடலில் தத்தளித்த முதியவர்.. ‘9 முறை கடல்ல மூழ்கிட்டேன்’.. உயிர் பிழைத்தவர் சொன்ன உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்டோங்கோ தீவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிர் பிழைத்த உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது
தெற்கு பசிபிக்கடலில் கடந்த சனிக்கிழமை எரிமலை ஒன்று வெடித்தது. இதனால் டோங்கோ தீவுகளில் சுனாமி ஏற்பட்டது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், சுனாமியால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் சில நாட்களாக வெளியுலகுக்கு தெரியவில்லை. ஐந்து நாள்களுள் கடந்த நிலையில், தற்போதுதான் டோங்கோ தீவுவில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
சுனாமி ஏற்படுத்திய விபத்தில் மக்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர்? சேதம் எவ்வளது ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. உலக நாடுகள் பலவும் டோங்கோ தீவுக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்த நிலையில், சுனாமி அலையில் சிக்கி மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் உயிர் பிழைத்த தகவல் வெளியாகியுள்ளது. 57 வயதான மாற்றுத்திறனாளி முதியவர் லிசாலா ஃபொலாவு, சுனாமி அலையால் கடலில் அடித்து செல்லப்பட்டார். கிட்டத்தட்ட 28 மணிநேரம் கடலில் நீந்திக்கொண்டே இருந்துள்ளார்.
அப்போது 9 முறை கடலில் மூழ்கியதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும் எப்படியாவது பிழைத்தே ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கை தன்னை கரை சேர்த்ததாக லிசாலா ஃபொலாவு கூறியுள்ளார். தற்போது இவர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்