அட, என்னய்யா சொல்றீங்க...? 30 வருஷமா 'இப்படி' தான் நடந்திட்டு இருக்கா...? 'தயவுசெஞ்சு எங்கள மன்னிச்சிடுங்க...' - சர்ச்சையில் சிக்கிய 'ஜப்பான்' மருத்துவமனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பனின் புகழ் பெற்ற மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜப்பானில் இருக்கும் புகழ்பெற்ற ஓசாகா மருத்துவமனை பல்கலைக்கழகத்தில் குடிநீர் குழாய்க்கு பதில் கழிவறை குழாய்க்கு கொடுத்த தவறான கனெக்ஷன் காரணமாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் டாய்லெட் நீரையே குடிநீராக குடித்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக பைப் கனெக்ஷன்களும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் படி பழுதுகளை சரிசெய்யும் போது தான் குடிநீர் குழாய் டாய்லெட் குழாயுடன் இணைக்கப்பட்டது மருத்துவமனை நிர்வாகதினருக்கு தெரியவந்துள்ளது.
இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் மருத்துவமனையின் தண்ணீர் தரம் குறித்து வாரம் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுமாம்.
இந்த செய்தி ஜப்பான் முழுவதும் வைரலாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒசாகா பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குநரும், துணைத்தலைவருமான கசுஹிகோ நகாதானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஒசாகா பல்கலைக்கழக வளாக மருத்துவமனையில் ஏற்பட்ட எதிர்பாராத தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த இன்னும் முறையான விசாரணை செய்ய உள்ளோம்' என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்