கொரோனா பீதி: ‘டாய்லெட் பேப்பருக்காக அடித்துக்கொள்ளும் கஸ்டமர்கள்’..‘இந்த 8 பக்கங்களை’- நியூஸ் பேப்பர் நிறுவனம் கொடுத்த ஆஃபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு உண்டாகியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளைத் தவிர்த்த பிற நாடுகளில் டாய்லெட் பேப்பர் என்பது அத்தியாவசியமான ஒன்று. இந்த நிலையில் பொதுமக்கள் டாய்லெட் பேப்பர்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதனால் அதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்டவற்றின் விலைக்கு நிகராக அவை விலை கூடிவிட்டதாக அந்நாட்டு மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.சிலர் டாய்லெட் பேப்பர்களுக்காக காட்டுத்தனமாக அடித்துக்கொள்ளும்
Fighting for toilet paper?This is shocking..."We just ask that people don't panic like this when they go out shopping. There is no need for it. It isn't the Thunderdome, it isn't MadMax, we don't need to do that," said an acting police inspector in Sydney🇦🇺. #toiletpapercrisis pic.twitter.com/MlzSg5V9Y3
— Manuel Ribeiro (@manuelribeiro) March 8, 2020
வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஒரு ரோல் டாய்லெட் பேப்பரின் விலை 3999 டாலர்கள் அது வாங்கினால் ஒரு கேரட் வைர மோதிரம் இலவசம் என்பன போன்ற சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டும் வரும் நிலையில், சூப்பர் மார்க்கெட்டுகளில் டாய்லெட் பேப்பர் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகளை துடைத்துச் சுத்தம் செய்யும் அளவுக்கு அனைவரும்
— Elon Musk (@elonmusk) March 8, 2020
டாய்லெட் பேப்பர்களை எடுத்துக்கொள்கின்றனர். இதையெல்லாம் விட ஆச்சரியம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்.டி நியூஸ் பேப்பர் நிறுவனம், வழக்கத்தைவிட 8 பக்கங்களை கூடுதலாக அச்சடித்து, அதில் செய்திகள் எதையும் அச்சிடாமல், ‘எங்கள் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு இருக்கும் டாய்லட் பேப்பர் பற்றாக்குறையை தெரிந்தே இவ்வாறு செய்துள்ளோம். மீதமுள்ள 8 பக்க பேப்பர்களை நீங்கள் டாய்லட் பேப்பராக பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்கிற தகவலை அச்சடித்துள்ளது. இந்த சம்பவங்கள் #toiletpapercrisis என்கிற
Run out of shit tickets?
NT news has you converted!!#literally 🧻 @TheNTNews #ToiletPaperEmergency #Australia pic.twitter.com/yj4asrkLjA
— RFTTE (@rftte) March 4, 2020
ஹேஷ்டேகின் கீழ் ட்ரெண்டிங்கில் உள்ளன.