அப்பாவின் உயிர் தியாகம் அறியாத... 19 மாத குழந்தை... தந்தையின் இறுதிச் சடங்கில்... மனதை உருக்கிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கப் போன வீரர்களில் ஒருவரான இளைஞர் உயிரிழந்ததை அடுத்து அவரது இறுதிச் சடங்கில், வீரரின் மகனுக்கு உயரிய கவுரவ பதக்கம் வழங்கப்பட்டது.

அப்பாவின் உயிர் தியாகம் அறியாத... 19 மாத குழந்தை... தந்தையின் இறுதிச் சடங்கில்... மனதை உருக்கிய சம்பவம்!

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது. தெற்கு சவூத் வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீ தற்போது மெல்ஃபோர்ன் நகர் வரை பரவி உள்ளது. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன.

காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் 32 வயதான ஜெஃப்ரி கீட்டன் என்ற வீரர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடிய போது, எரிந்து கொண்டிருந்த மரம் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உயிர் தியாகத்தை கவுரப்படுத்தும் வகையில், அவரது இறுதிச் சடங்கின் போது, நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத் துறை கமிஷனர் ஷேன், உயிரிழந்த கீட்டனின் 19 மாத குழந்தையான ஹார்வே கீட்டனுக்கு, உயரிய கவுரவ பதக்கத்தை வழங்கினார்.

அப்போது கமிஷனர் ஷேனின் கண்கள் கலங்கின. ஏனெனில், தனது தந்தை இறந்ததைக் கூட அந்த சிறுவன் அறிந்திருக்கவில்லை. இந்தச் சம்பவம் அங்கிருந்த வீரர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தன. பின்னர் தீயணைப்புத்துறை வீரர்கள் அனைவரும் கீட்டனுக்கு சல்யூட் அடித்து இறுதி மரியாதை செய்தனர். இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜெஃப்ரி கீட்டனின் தியாகத்தை பாராட்டி வருத்தம் தெரிவித்தார். 

AUSTRALIA, FIREFIGHTER, YOUNG