"விபத்து நடந்ததுக்கு அப்புறம் இப்டித்தான் இருந்துச்சா".. 35 வருஷம் கழிச்சு வெளியான டைட்டானிக் கப்பலின் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 111 ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்த செய்தியை உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

"விபத்து நடந்ததுக்கு அப்புறம் இப்டித்தான் இருந்துச்சா".. 35 வருஷம் கழிச்சு வெளியான டைட்டானிக் கப்பலின் வீடியோ!!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | 3000 அடி உயரமான மலையில் அருற்பாலிக்கும் விநாயகர்.. அங்கு சென்று வியப்பை ஏற்படுத்திய பூசாரி.!

கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டைட்டானிக் சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் பனி பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. முன்னதாக இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தை டைட்டானிக் கப்பல் தொடங்கி இருந்தது.

கடவுளே நினைத்தாலும் இந்த கப்பலை கவிழ்க்க முடியாது என டைட்டானிக் கப்பலின் கேப்டன் கூறி இருந்த சூழலில் முதல் பயணம் நிறைவேறாமலேயே விபத்து ஏற்பட்டது.

Titanic Ship wreck never seen footage released after 35 years

Images are subject to © copyright to their respective owners.

உலக அளவில் இந்த சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்த சூழலில், கடந்த 1985 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து ஆய்வு செய்ய முதல் முறையாக ‘உட்ஸ் ஹோல் ஓஷியானிக் நிறுவனம்’ - பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து குழு ஒன்றை அனுப்பி இருந்தது. அந்த ஆய்வை முடித்துக் கொண்டு 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் திரும்பி இருந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ பதிவுகளும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

Titanic Ship wreck never seen footage released after 35 years

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருந்த டைட்டானிக் திரைப்படத்தின் 25 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் வகையில் அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலகையே கதிகலங்க வைத்த டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் திரைப்படம் ஒன்றை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் கவனம் பெறவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், டைட்டானிக் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன சூழலில், நீரில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் வீடியோ குறித்த செய்தி அதிக வைரலாகி வருகிறது.

Also Read | "இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும்".. ரோஹித் ஷர்மாவுக்காக பாகிஸ்தானில் ரசிகர் வெச்ச பேனர்.. ட்ரெண்டிங்!!

TITANIC SHIP WRECK, FOOTAGE

மற்ற செய்திகள்