Vilangu Others

விராட் கோலியை மிஞ்சிய டிக் டாக் பிரபலம்.. நா குடிக்கிறது சாதாரண தண்ணீர் இல்ல.. ரகசியத்தை போட்டுடைத்த நபர்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 1 கேலன் (4 லிட்டர்) தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.  2025 ஆம் ஆண்டளவில் நீர் பற்றாக்குறையால் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பெண்கள்  3.7 மைல்கள் சென்று நீர் சேகரிக்கிறார்கள். இது இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கலாம். நாம் தண்ணீரை குடிப்பதற்கும், குளிப்பதற்கும், அழுக்குகளை கழுவி அகற்றுவதற்கும் மட்டுமன்றி, உணவு உற்பத்திக்கும் பயன்படுத்துகிறோம்.  போதிய தண்ணீர் உள்ள நாடுகளே உணவு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

விராட் கோலியை மிஞ்சிய டிக் டாக் பிரபலம்.. நா குடிக்கிறது சாதாரண தண்ணீர் இல்ல.. ரகசியத்தை போட்டுடைத்த நபர்

இப்படி ஒரு மனிதரா?

இந்நிலையில், குடிநீருக்காக ஒருவர் லட்சக்கணக்கில் ரூபாயை செலவு செய்வது ஆச்சர்யத்த ஏற்படுத்தலாம். ஆனால், அது உண்மைதான், உயர் தரத்திலான தண்ணீருக்க அந்த நபர் மாதந்தோறும் லட்சக்கணக்கில் செலவு செய்து வருவது அதிர்ச்சியை தருகிறது. ராயன் என்ற டிக் டாக் பிரபலம் அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,  உயர் தரத்திலான குடிநீரை வாங்க ரூ.1.5 லட்சம் மாதந்தோறும் செலவு செய்வதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது எப்படி? பாட்டில் அடைத்து விற்கப்படும் தண்ணீரா இருந்தாலும் இவ்வளவு செலவாக வாய்ப்பில்லை என்று கூறலாம்.

ஒரு பாட்டில் தண்ணீர்

ஆனால், இந்த தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது, இவ்வளவு காஸ்ட்லியாக செலவு செய்ய என்ன காரணம் என்பதை அவரே விளக்குகிறார்.

தனக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீர் அருந்துவது பிடிக்காது.  இதனால், இயற்கையான தண்ணீரை பெரும் செலவு செய்து வாங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தண்ணீரின் சுத்தம், மட்டுமல்லாமல் இயற்கை பாதுகாப்பு குறித்தும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ராயன். இதனால், தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கும் நிறுவனத்திடம் இருந்துதான் அவற்றை வாங்குகிறார்.

தண்ணீர் குடித்து, முடித்த பிறகு அந்த பாட்டில்கள் அனைத்தையும் மறுசுழற்சிக்கு ராயன் அனுப்பி வைத்து விடுகிறார்.இயற்கையை நேசிக்கும் ராயன் வீட்டில், பாட்டில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவே 4 ஃபிரிட்ஜ்கள் உள்ளன. கண்ணாடி பாட்டில்களில் குடிநீரை விற்கும் வோஸ் (VOSS) என்ற நிறுவனத்திடம் இருந்துதான் இவர் தண்ணீர் வாங்கி வருகிறார். இதற்காக, மாதந்தோறும் இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை செலவு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் கேள்வி

தூய்மையான குடிநீர் குடிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வதா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு ராயன் கூறியதாவது, "நான் எப்போதும் தூய்மையான தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஆனால், நீங்களெல்லாம் நரகத்தில் இருப்பதை போல அசுத்தமான தண்ணீரை குடித்து வருகிறீர்கள். உங்களை போல என்னால், குழாய் தண்ணீரை எல்லாம் குடிக்க முடியாது. கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே நான் விரும்பி குடிப்பேன். எனக்காக நான் செய்து கொள்ளும் ஒரே விஷயம் இதுதான்" என்று கூறியுள்ளார்.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  ஆரோக்கியமான டயட் என்பதை உணவுகளில் மட்டுமன்றி, தான் குடிக்கும் நீரிலும் ஆரோக்கியத்தை விரும்புவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.  விராட் குடிக்கும் 'பிளாக் வாட்டர்' ('Black Water') விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட 3000-4000 ரூபாய். இந்த நீர் இயற்கையான-கருப்பு கார நீர் (natural-black alkaline water) ஆகும். இது உடலில் நீர்சத்து தங்கியிருக்க உதவுகிறது. பிளாக் வாட்டரில் pH அதிகமாக உள்ளது.

WATER, VIRAT KHOLI, TIK TOK

மற்ற செய்திகள்