ஒரே வீட்டில்... ஒரே தம்பதியாக... ஒரு முக்கோண காதல்!.. 'இவங்களோட அடுத்த ஆசை 'இது' தான்'!.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இணைந்து, ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி, ஒரே தம்பதியாக வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
'ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்' என்ற இணையரை couple என்று அழைக்கிறோம். ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில், இரு ஆண்களையோ அல்லது இரு பெண்களையோ couple என்று குறிப்பிடுகிறோம்.
ஆனால், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வாழும் throuple தம்பதியினர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
throuple என்றால் 3 பேர் இணைந்து ஒரே தம்பதியாக இருப்பது என்று பொருள். எளிமையாக குறிப்பிட்டால் ஒரு முக்கோண காதல் தம்பதியினர்.
Princess Lolly the fairy என்ற பெண்ணும், Gunther the troll என்ற ஆணும், Ion the Leprechaun என்ற மற்றொரு ஆணும், seattle நகரத்தில் throuple ஆக குடும்பம் நடத்தி வருகின்றனர்.
முதன் முதலில் Lollyயும் Gunther-உம் மலர் கண்காட்சி ஒன்றில் அறிமுகமாகியுள்ளனர். பின் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், Ion என்பவருடன் இவர்கள் இருவருமே காதல் வயப்பட்டுள்ளனர். அவரும் Lolly மற்றும் Gunther உடன் காதலில் விழுந்துள்ளார்.
அப்போது இருந்து, இவர்கள் மூவரும் ஒரே வீட்டில், ஒரே தம்பதியாக throuple ஆக வாழ்ந்து வருகின்றனர்.
அத்தகைய throuple தம்பதி சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்து தான் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகியிருக்கிறது.
அவர்கள் கூறியதாவது, "நாங்கள் மூவரும் ஒரே தம்பதியாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறோம். எங்கள் குடும்பத்தில் நான்கவதாக யாரேனும் இணைய விரும்பினால், நன்றாக இருக்கும் என்று கருதிகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்