யாருக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது..! கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக செல்லும் ஆப்கான் மக்கள்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி கூட்டம் கூட்டமாக மக்கள் பாலவனத்தில் நடத்து செல்லும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் காபூல் விமான நிலையம் அருகே ஐஎஸ் கோரோசான் அமைப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளில்லா விமானங்கள் மூலம் ஐஎஸ் கோரோசான் அமைப்பினர் பதுங்கியிருந்த பகுதிகளை அமெரிக்கா தாக்கியது.
இதனை அடுத்து காபூல் விமான நிலையத்தை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதும், அதனை தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மக்கள் பலர் வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கான் மக்கள் பலரும் தாலிபான்களுக்கு பயந்து பாலவனம் வழியாக நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் என கண்ணிக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகளே தென்பட்டன. கைக்குழந்தைகளுடன் ஆப்கான் மக்கள் வெளியேறி வருவதை மனிதகுலத்தின் பேரவலம் என ஐரோப்பிய எம்பிக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்