உலகின் தனிமையான வீடு இது தான்.. தீவுக்கு நடுவே வெள்ளை நிற விடு.. விஷயம் தெரிஞ்சு வெலவெலத்து போன நெட்டிசன்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் வியப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஏராளமான இடங்கள் உள்ளது. அவை குறித்து புதிது புதிதாக நிறைய தகவல் வெளியே வரும்.
Also Read | 16 ஆவது நாள் காரியத்தின் போது.. லட்சுமி யானையின் கால் தடம் தென்பட்டதா?.. பரபரப்பு சம்பவம்!!
எந்த அளவுக்கு புது புது இடங்கள் குறித்து தெரிய வரும் தகவல் வியப்பை ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்கு சில இடங்கள் மர்மம் நிறைந்த வகையிலும் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி ஒரு இடம் குறித்த தகவல் தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
நீல நிற கடலுக்கு மத்தியில் நடுவே ஒரு பச்சை நிறம் மலை ஒன்று சிறிதாக இருக்கிறது. அதற்கு நடுவே வெள்ளையாக இருக்கும் ஒரு சிறிய வீடு குறித்து செய்தி தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. மனிதர்கள் அதிகம் வாழும் இடத்தில் இருந்து மிகவும் தள்ளி கடல் நீரின் நடுவில் இருக்கும் இந்த வீடு, ஐஸ்லாந்து நாட்டின் தெற்கு பகுதி கடலில் அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த தீவின் பெயர் எல்லிடே (Elliðaey) என கூறப்படுகிறது. தற்போது உலகின் தனிமையான வீடு என பெயர் பெற்றுள்ள இந்த வீட்டில் ஒரு காலத்தில் 300 வருடங்களாக 5 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த குடும்பங்கள் கடந்த 1930 களில் தீவை விட்டு வெளியேறிய பின்னர் இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் இந்த தீவில் இருக்கும் ஒரே ஒரு வீடு உலகிலேயே மிகவும் தனியான வீடு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வீட்டைச் சுற்றி சில வதந்திகளும் உள்ளன. ஜாம்பி மனிதர்கள் உலகம் முழுவதும் வந்து விட்டால், உயிரை காத்துக் கொள்ள ஒரு பணக்காரர் இந்த வீட்டை கட்டியதாக தகவல் ஒன்று உள்ளது. அதே போல, ஐஸ்லாந்து நாட்டின் பாடகர் ஒருவருக்கு சொந்தமான வீடு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இவை அனைத்தையும் தவிர இந்த வீடு போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் உண்மையில் இப்படி ஒரு இடமே இல்லை என்றும் ஒரு பக்கம் இனையத்தில் பார்க்கும் மக்கள் இது பற்றி தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் எல்லிடே தீவில் இருக்கும் இந்த தனிமையான வீடு, எல்லிடே வேட்டை சங்கத்திற்கு சொந்தமானது என்றும், சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் நோர்டீக் பறவைகள் அதிகம் என்றும் சில உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, இந்த தீவிற்கு செல்வதே சவாலான ஒரு விஷயம் என கூறப்படுகிறது. இந்த தீவிற்கு செல்ல வேண்டுமென்றால் படகு ஏற்பாடு செய்து செல்ல வேண்டும். அதே வேளையில் அங்குள்ள குளிரில் பெரிய அலைகளுக்கு நடுவே திகில் ஊட்டும் பயணமாக அது இருக்கும் என சொல்லப்படுகிறது. தீவை அடைந்தால் கூட அங்கிருந்து அந்த வீட்டுக்கு செல்வதும் மிகவும் சாகசம் நிறைந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வீட்டிற்குள் சோஃபா, பெரிய மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட விஷயங்களும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. வீட்டில் ஏராளமான வசதிகள் இருந்தாலும் அங்கு சென்று அடைவது என்பது ஒரு சவாலான விஷயமாக பார்க்கப்படும் அதே வேளையில் சாகசத்தில் விருப்பம் உள்ளவர்கள், இதுவரை ஆயிரக்கணக்கானோர் அங்கே சென்று வந்துள்ளார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த தீவில் உள்ள வீட்டை பற்றி கேள்விப்படும் பலரும் நிஜத்தில் இது உலகின் தனிமையான வீடு தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்