'வீடு வாங்க ஐடியா இருக்கா'?... 'வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்கும் நகரம்'... பின்னணியில் இருக்கும் சுவாரசிய காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

12 ரூபாய்க்கு வீடு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'வீடு வாங்க ஐடியா இருக்கா'?... 'வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்கும் நகரம்'... பின்னணியில் இருக்கும் சுவாரசிய காரணம்!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும்  பெரும் கனவு. அந்த கனவை நனவாக்க வரும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து பலரும் ஒரு சொந்த வீட்டினை வாங்கி விடுவார்கள். ஆனால்  இந்த நகரத்தில் வீடு வாங்க உங்கள் கையில் வெறும் 12 ரூபாய் இருந்தால் போதும் என அறிவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பை குரோசியா நாட்டின் லெக்ராட் நகரம் வெளியிட்டுள்ளது. வட குரோசியாவில் அமைந்துள்ள லாக்ராட் நகரம் 62.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் ஆட்சி நடைபெறும் வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது.

THIS Croatian Town Is Selling Houses To New Residents At Rs 12

ஆட்சி முறியடிக்கப்பட்ட பின் மக்கள் அருகில் உள்ள இடத்திற்கு பல்வேறு வசதிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 19-ம் நூற்றாண்டில் மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது. தற்போது 2241 பேர் வசித்து வருகிறார். இதனால் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. தனிநபர் அல்லது ஜோடிகள் வீடுகளை வாங்கலாம். அவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நன்றாகப் பணம் செலவழிப்பவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது லெக்ராட்டில் வசிக்க வேண்டும்.

குரோஷியாவில் குடிவரவு சிக்கலானது, ஆனால் இந்த நகரம் புதியவர்களுக்கு உணவு உற்பத்தி, மர பதப்படுத்துதல் மற்றும் உலோக பதப்படுத்தும் தொழில்களில் வேலை வாய்ப்புகளை வழங்கும். ‘‘குத்தகை தாரராக இருப்பதை விட உங்கள் சொந்த இடத்தில் வாழ்வது மிகவும் இனிமையானது. இங்கு 15 ஆண்டுகள் தங்கியிருப்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையல்ல’’ என அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

THIS Croatian Town Is Selling Houses To New Residents At Rs 12

இதற்கிடையே லெக்ராட் நகரத்திற்கு மீண்டும்  மக்களைக் கொண்டு வர, லெக்ராட் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு குனாவிற்கு (11 ரூபாய் 83 பைசா) வீடு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்