VIDEO : 'ஆன்லைன்' க்ளாஸ் நடந்துட்டு இருந்தப்போ,,.. "உன் 'பின்னாடி' யாரோ வராங்க",.. அதிர்ந்து போன 'மாணவி'... அடுத்தடுத்து நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துங்குராஹுவா (Tungurahua) மாகாணத்தின் அம்பட்டோ (Ambato) என்னும் பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது திடீரென ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி ஒருவரின் வீட்டிற்கு திருடர்கள் வந்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி பதறிப் போன நிலையில், அந்த மாணவியை மிரட்டி அவரது பொருட்களை கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைய, திருடன் லேப்டாப்பை அணைத்துள்ளான்.
அந்த கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக காரில் ஏறி தப்பித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, உடனடியாக ஈக்வடார் (Ecuador) போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், Huachi Grande என்னும் பகுதியில் வைத்து கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 4,000 டாலர்கள் பணம் (இந்திய மதிப்பில் சுமார் 3 லட்ச ரூபாய்), இரண்டு துப்பாக்கிகள், இரண்டு மொபைல் போன்கள்ம் லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, அந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன
மற்ற செய்திகள்