"டிரம்ப்பின் H-1B விசா முடிவு!".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் H-1B and L-1 விசாக்களின் மூலம் தங்கி பணிபுரிபவர்களுக்கு இந்த விசாக்களின் மீதான தற்காலிகத் தடையை இந்த ஆண்டு இறுதிவரை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீட்டித்துள்ளார்.

"டிரம்ப்பின் H-1B விசா முடிவு!".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்?

இதனால் Wipro, TCS மற்றும் Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன. சுமார் 4 லட்சம் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக வெளியான அதிரடி ரிப்போர்ட்கள் கதிலகலங்க வைத்துள்ளன.

1948-ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் தற்போதுதான் வேலையில்லா திண்டாட்டத்தின் விகிதம் 13.3 % ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் நிலை தற்போது டிரம்பின் விசா விவகார முடிவினால் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வரும் 2025-ஆம் ஆண்டு வரை, 75% ஊழியர்களை மட்டுமேக் கொண்டு செயல்பட ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகளை குறைத்து உற்பத்தி செலவுகள் அதிகரிக்கவும், இந்த கொரோனா சூழலில் ஐடி துறையில் ஏற்பட்ட தடுமாற்றம் சீராக வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்