'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவின் சிக்கிம், லடாக் மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் எல்லைப்பகுதியில் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதனை தாங்கள் நடுவராக இருந்து தீர்த்து வைக்க உதவுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். அதற்கு, சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அமெரிக்க அதிபருக்கு பதில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் பேசியதாகவும், சீனாவுடனான எல்லை பிரச்னையில் அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றும் மோடி தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் ஆகியோரிடையே சமீபத்தில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதியன்று பேசியதே இருவருக்குள்ளும் இடையே நடந்த கடைசி உரையாடல் என்றும், அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளன. நிலைமை இப்படி இருக்கையில், இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக மோடி நல்ல மனநிலையில் இல்லை என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மற்ற செய்திகள்