“எதையும் மிஸ் பண்ணிடலல?.. போலாம் ரைட்!” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்சிசிடிவி காட்சிகள் மூலம் பல நேரங்களில் நமக்கு சில சர்ப்ரைஸ் கிடைப்பதுண்டு.
அப்படித்தான் ஒட்டுமொத்த வீடியோவும் முடியும்பொழுது ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இந்த வீடியோவில் ஒரு பெண்மணி கார் கதவருகே நின்றுகொண்டு, நாம் எதையும் விட்டுவிட்டோமா? எல்லாம் சரியாக நம்மிடம் இருக்கிறதா? என்பதையெல்லாம் ஒருமுறை தனக்குத்தானே உறுதி செய்துகொள்கிறார். பிறகு எல்லாம் கிளியர் என்கிற சுய பரிசோதனை அவரிடம் இருக்கிறது என்பது அவர் ஏறும் தொனியிலேயே தெரிகிறது.
இந்த வீடியோவில் என்ன ஆச்சரியம் என்று நாமும் கொட்ட கொட்ட கண்விழித்து காத்திருக்கிறோம். ஆனால் அந்த கார் நகரும்போதுதான் 26 நொடிகள் கொண்ட அந்த வீடியோவின் முடிவு நமக்கு ‘அட’ என்கிற ஒரு ஆச்சரியத்தையும் தருகிறது. அப்படி, அந்த பெண்மணி காரில் ஏறி, கார் நகர்ந்த பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை பார்க்கும் போதுதான் நமக்கு அந்த ஆச்சரியம் தெரியவருகிறது.
இந்த சிறுவன் இன்னும் காரில் ஏறவே இல்லை. எல்லாத்தையும் நினைவுபடுத்திக் கொண்டு உறுதியாக காரில் ஏறிய அந்த பெண் கடைசியில் சிறுவன் காரில் ஏறிவிட்டானா என்பதை பார்க்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. அவர் காரை நகர்த்திய பின்னர்தான் சிறுவன் நின்றுகொண்டிருப்பது சிசிடிவி கேமராவில் தெரிகிறது.
Forgot something ? pic.twitter.com/hXpWqAesWZ
— CCTV_IDIOTS (@cctv_idiots) January 18, 2021
கொஞ்ச தூரம் காரை இயக்கிச் சென்றுவிட்ட அந்த பெண்மணி, பிறகு காரில் இருந்து இறங்கி ஓடிவந்து சிறுவனை வாரியணைத்து ‘மன்னிச்சுடுறா தங்கமே. உன்னை மறந்துட்டு போயிட்டேனே’ என்கிற ரீதியில் தூக்கிக் கொண்டு காருக்கு செல்கிறார். எங்கு எப்போது நடந்தது என விபரங்கள் இல்லாத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்