"எப்படியும் அமெரிக்காவை மீட்டு விடுவோம்..." 'ட்ரம்பின்' தைரியத்துக்கு இதுதான் 'காரணம்...' 'அதிபரின் பேச்சில்' எப்பொழுதும் குறையாத 'நம்பிக்கை...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 10 மருந்துகள் சோதனையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"எப்படியும் அமெரிக்காவை மீட்டு விடுவோம்..." 'ட்ரம்பின்' தைரியத்துக்கு இதுதான் 'காரணம்...' 'அதிபரின் பேச்சில்' எப்பொழுதும் குறையாத 'நம்பிக்கை...'

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை வைரஸ் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 691 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவும், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்நாடு கடந்த மாதமே தடுப்பு மருந்துக்கான தனது சோதனை முயற்சிகளை தொடங்கிவிட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், அமெரிக்க நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைக்கு, 10 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. காலதாமதம் இல்லாமல், மருந்தைக் கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளிலும், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளால், மிக மிக விரைவில், நாம் மருந்துகளை தயாரிப்போம். எனக் கூறினார்.