சிட்டிசன் படத்தின் அத்திப்பட்டி கிராமம் போல்.. கூகுள் மேப்பில் இருந்து காணமால் போன தீவு.. ஆய்வாளர்கள் அளித்த விளக்கம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு தீவு காலப்போக்கில் காணாமல் போகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிட்டிசன் படத்தின் அத்திப்பட்டி கிராமம் போல்.. கூகுள் மேப்பில் இருந்து காணமால் போன தீவு.. ஆய்வாளர்கள் அளித்த விளக்கம்

நீங்க இப்படி கூடு கட்டினா.. பறவைகள் வந்து அதுல வாழுமா? கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்த பறவைக் காதலன்

அஜித் நடித்த சிட்டிசன் என்ற திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போன சம்பவம் போன்று ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு தீவும் காணாமல் போயுள்ளதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீவு கண்டுபிடிப்பு:

கடந்த 1774ஆம் ஆண்டு கடல் வழி பயணம் மேற்கொண்டு உலகை சுற்றி வந்த ஜேம்ஸ் குக் என்பவர் தன்னுடைய நாட்குறிப்பில் தான் ஒரு தீவினை கண்டுபிடித்ததாக எழுதியுள்ளார். சுமார் 22 கி.மீ நீளமுள்ள அந்த தீவு 5 கி.மீ அகலமும் கொண்டது. இது பசுபிக் கடலில் ஆஸ்திரேலியாவிற்கு அருகே கண்டறியப்பட்டதால் இந்த தீவிற்கு அவர் 'Sandy Island' எனவும் பெயரிட்டுள்ளார்.

கூகுள் மேப்பில் காணமல் போன தீவு:

அதோடு இந்த தீவை பாந்தோம் தீவுகள் என்றும் அழைக்கின்றனர். இந்த றார்கள். இந்த 'Sandy Island' தீவு சில ஆண்டுகள் முன்பு வரை கூகுள் மேப்பிலும் இருந்துள்ளது. அதனை பலர் சென்று பார்த்துள்ளதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று பலர் இந்த தீவு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் போது அங்கு அப்படிப்பட்ட ஒரு தீவே இல்லை என பதிவிட்டு வருகின்றனர். அதோடு கூகுள் மேப்பிலிருந்தும் அந்த தீவு காணாமல் போயுள்ளது.

The sandy island that disappeared from Google Maps

19-ம் நூற்றாண்டில் பிரட்டன் மற்றும் ஜெர்மனி சேர்ந்து உருவாக்கிய வரைபடத்தில் இருந்த தீவு:

மேலும், இந்த 'Sandy Island' தீவு குறித்து 1876ம் ஆண்டு வெலாசிட்டி என்ற கப்பல் பயணிக்கும் போது எழுதப்பட்ட குறிப்பிடும் இடம் பெற்றுள்ளது. அந்த கப்பலில் பயணித்தவர்கள் இந்த தீவை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். 19-ம் நூற்றாண்டில் பிரட்டன் மற்றும் ஜெர்மனி சேர்ந்து உருவாக்கிய வரைபடத்திலும் இந்த தீவு இடம் பெற்றள்ளது. ஆனால் 1979ம் ஆண்டு பிரான்ஸ் அரசால் வெளியிடப்பட்ட ஹைட்ரோகிராபிக் சர்வீஸ் மேப்பில் இந்த தீவு இடம் பெறவில்லை. 2012ம் ஆண்டு இந்த தீவு குறித்த மர்மத்தைகண்டுபிடிக்க சில ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தண்ணீருக்குள் முழ்கியிருக்குமா?

தண்ணீருக்குள் முழ்கியிருக்குமா? என ஆய்வு மேற்கொண்டபோது, இந்த தீவு இருந்ததாக சொல்லப்படும் நிலத்தில் கடல் நீரீன் ஆளம் சுமார் 4300 அடிக்கு கீழே இருக்கிறது. தீவு நீருக்குள் முழ்கியிருந்தால் இவ்வளவு ஆழம் செல்ல வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

பேப்பர்களில் மட்டுமே இருக்கும் இந்த தீவு, இருந்ததற்கான அடையாளமே இல்லை. இப்படி ஒரு இடமே அழிந்து போய்விட்டதா? அல்லது மேப்பில் தவறான விஷயங்களால் எழுதப்பட்டதா என விபரம் தெரியவில்லை எனவும் பலர் குறிப்பிடுகின்றனர்.

வடகொரிய அதிபர் வெறுக்கும் ஒரு பாறை.. அந்த தீவு மேல அப்படி என்ன தான் கடுப்பு? எல்லா ஏவுகணையையும் அங்கையே அனுப்புறாரு

SANDY ISLAND, DISAPPEAR, GOOGLE MAPS, காணமால் போன தீவு, ஆஸ்திரேலியா, கூகுள் மேப்

மற்ற செய்திகள்