எப்போதும் handbag உடன் பயணித்த இங்கிலாந்து ராணி.. அழகுக்கு மட்டும் இல்ல.. அதுல இப்படி ஒரு குறியீடும் இருந்திருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எப்போதும் விதவிதமான handbag எனப்படும் கைப்பையை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். நம்மில் பலரும் அது அழகுக்கானது என்றே நினைத்திருப்போம். ஆனால், அதன்மூலம் தான் ரகசிய செய்திகளை தனது ஊழியர்களுக்கு தெரிவித்து வந்திருக்கிறார் ராணி.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அவருடைய உடல் விண்ட்சர் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
handbag
70 ஆண்டுகள் ராணியாக வலம்வந்த இரண்டாம் எலிசபெத் தனது பயணத்தின்போது நிச்சயம் கைப்பை ஒன்றையும் வைத்திருப்பார். தன்னுடைய உடைகளுக்கு ஏற்றபடி கைப்பையையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறார் இரண்டாம் எலிசபெத். Launer என்ற பிரிட்டிஷ் பிராண்ட் ராணியின் கைப்பைகளை உருவாக்கி வந்தது. தான் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய உடைகளில் மாற்றம் கொண்டுவந்தார் இரண்டாம் எலிசபெத். முழங்காலுக்கு கீழே கனத்த விளிம்புகள் கொண்ட ஸ்கர்ட், அதற்கு ஏற்றாற்போல தொப்பி, முத்து மாலை என தனக்கென ஒருபாணியை ராணி பின்பற்றிவந்திருக்கிறார். அவற்றுள் முக்கியமானது அவருடைய கைப்பைகள்.
இரண்டாம் எலிசபெத்-இடம் சுமார் 200 கைப்பைகள் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பொதுவாக, வெளியே பயணம் மேற்கொள்ளும்போது கைப்பை இல்லாமல் ராணி செல்வதில்லை. தன்னுடைய கைப்பை இல்லாவிட்டால், தன்னுடைய ஆடை முழுமை அடைந்ததாக தோன்றுவதில்லை என பலமுறை ராணி தன்னுடைய பணியாளர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. ராணியாக தினந்தோறும் பலவேறு மக்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் கைப்பையின் கைப்பிடிகள் எப்போதும் நீளமாக இருப்பதையே ராணி விரும்பியிருக்கிறார். ஏனென்றால், மக்களிடம் கைகுலுக்கும்போது கைப்பைகள் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த தேர்வு. அதேபோல, தனது கைப்பையினுள் எப்போதும் 5 யூரோ தாள் ஒன்றையும் ராணி வைத்திருப்பாராம். தேவாலயத்திற்கு செல்லும்போது அங்கே நன்கொடை கொடுக்கவே இந்த பணம். அதேபோல், சிறிய கண்ணாடி மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவையும் கைப்பையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ரகசிய தகவல்
வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்த கைப்பைகள் அழகுக்காக பயன்படுத்தப்படுபவை என்றே பலரும் நினைப்பதுண்டு. ஆனால், அந்த கைப்பைகள் மூலமாக தனது பணியாளர்களுக்கு ரகசிய செய்திகளையும் அளித்துவந்திருக்கிறார் இரண்டாம் எலிசபெத். உதாரணமாக, ராணி தனது கைப்பையை மேஜையின் மீது அல்லது கீழே வைத்தால் உடனடியாக அந்த சந்திப்பு முடிவடையவேண்டும் என்று அர்த்தமாம். இப்படி ராணி வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திவந்த அந்த கைப்பைகள் இனி யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது.
Also Read | இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்.. நெகிழ்ச்சியில் தலாய் லாமா சொன்ன தகவல்..!
மற்ற செய்திகள்