'கொரோனாவுக்கு புதிய மாத்திரை...' 'கைகொடுக்கும் என விஞ்ஞானிகள் பரிந்துரை...' 'நியூயார்க் நகரில் சோதனை முயற்சி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், நியூ யார்க் நகரில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பரிசோதனை முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இது நல்ல பலனைக் கொடுக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கொரோனாவுக்கு இதுவரை அமெரிக்காவில் மட்டும் 56 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலோரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்கி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மாத்திரைகள் இந்த தொற்று நோய்க்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த மருந்துகள் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த மருந்துகள் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவில்லை என்றும் அமெரிக்க மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெட்சிட் மருந்து கலவையில் சேர்க்கப்படும் ஃபேமோட்டிடைன் என்ற மருத்துவ ரசாயனம் கொரோனா சிகிச்சைக்காக விரைவில் தயாராகுமென பெயின்ஸ்டைன் இஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவர் கெவின் டிரேசி தெரிவித்துள்ளார்.இந்த இன்ஸ்டிடியூட் நியூ யார்க் நகரில் 23 மருத்துவமனைகளை நிறுவி உள்ளது. இதுவரை 187 நோயாளிகள் இந்த மருத்துவனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவேளை இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி பலி எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.